வங்கிக் கடன் அட்டைகள் மற்றும் எ.ரீ.எம் களின் ஊடாக 45 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி செய்த சைபர் குற்றவாளிகளை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குற்றச் செயலுடன் தொடர்புடைய ஏழு பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
எட்டாம் சந்தேக நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. 26 நாடுகளின் வங்கிகளிலிருந்து இவ்வாறு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
போலியான அட்டைகளைப் பயன்படுத்தியும், தகவல்களை களவாடியும் இந்த மோசடி செய்யப்பட்டுள்ளது,ஐக்கிய அரபு இராச்சியம், ஓமான் ஆகிய நாடுகளில் அதிகளவு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
ஜப்பான், கனடா, பிரித்தானியா, ரோமானியா உள்ளிட்ட 12 நாடுகளில் இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
21ம் நூற்றாண்டின் மிக மோசமான வங்கி மோசடி இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment