டெல்லி: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வயதாகிவிட்டது என்று உணர்ந்த கடவுள் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவை படைத்தார் என்று தனது ரசிகர்கள் டுவீட் செய்ததை கிரிக்கெட் வீரர் டோணி ரீடுவீட் செய்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் 'சர்' பட்டம் கொடுத்துள்ளனர். மேலும் அவரைப் பற்றி பல ஜோக்குகள் டுவிட்டர், ஃபேஸ்புக்கில உலா வருகின்றது.
இந்நிலையில் சென்னை அணியின் கேப்டன் டோணி தனது ரசிகர்கள் டுவிட்டரில் ஜடேஜாவை பற்றி தெரிவித்துள்ளதை ரீடுவீட் செய்துள்ளார். அவை என்னவென்று பார்ப்போம்,
டுவிட்டரே ஜடேஜாவை ஃபாலோ செய்கிறது.
ரஜினி சாருக்கு வயதாகிவிட்டது என்பதை உணர்ந்த கடவுள் சர் ரவீந்திர ஜடேஜாவை படைத்தார்.பயிற்சிக்காக மதியம் 3 மணிக்கு கிளம்பினால் சர் ஜடேஜா பயிற்சி பெற ஸ்டேடியமே அவரைத் தேடி வருகிறது.
சர் ஜடேஜா பந்தை பிடிக்க செல்லத் தேவையில்லை பந்தே அவரது கையில் வந்து சேரும். சர் ஜடேஜா ஜீப் ஓட்டினால் அது ஓடாது ரோடு ஓடும்.
0 comments:
Post a Comment