Sunday, April 21, 2013


சென்னை: மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ள வடிவேலு, முதல் படமாக தெனாலிராமனைத் தொடங்குகிறார்.

இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பார்வதி ஓமணக்குட்டனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

காமெடி நடிகர் வடிவேலு கடந்த இரண்டு வருடமாக புதுப்படங்களில் நடிக்காமல் இருந்தார். அவரது தேர்தல் பிரச்சாரம், விஜயகாந்துடனான தனிப்பட்ட மோதல், வழக்குகள் காரணமாக, கிட்டத்தட்ட சினிமாவிலேயே இல்லாத நிலை.

இப்போது அந்த நிலையிலிருந்து மீண்டு வந்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் தெனாலிராமன் படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார் வடிவேலு.

யுவராஜ் இயக்கும் இந்தப் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டனை ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர் பிலலா 2 படத்தில் அஜீத்துடன் நடித்தவர். இன்னொரு நாயகியும் படத்தில் உண்டாம். ஆர்தர்வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசையமைக்கிறார்.
இந்தப் படத்துடன் மேலும் இரு படங்களிலும் வடிவேலு நடிக்கப் போகிறாராம்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below