கொளுத்தும் வெயிலில் வெப்பம் தாங்காமல் படப்பிடிப்பில் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் விஷால் நடிக்கும் பட்டத்து யானை படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா நடிக்கிறார்.
இது அவருக்கு முதல் படம் என்பதால் படப்பிடிப்பில் அதிகம் சிரமப்படுகிறாராம். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் இப்போது திருச்சியில் படமாக்கப்பட்டு வருகின்றன.
ஒரு வாரமாக கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பு நடைபெறுவதால், கதாநாயகி ஐஸ்வர்யா மிகவும் சிரமப்படுகிறாராம்.
வில்லன்கள் விஷால் - ஐஸ்வர்யாவை துரத்துவது போன்ற காட்சி நேற்று படமாக்கப்பட்டது.
அப்போது கொளுத்தும் வெயிலில் ஓடிய ஐஸ்வர்யா திடீரென்று மயங்கி விழுந்தார்.
மகள் நடிப்பதைப் பார்ப்பதற்காக திருச்சி சென்றிருந்த அர்ஜூன் பதறியபடி மகளை தூக்கினாராம்.
உடனடியாக அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஐஸ்வர்யா தொடர்புடைய காட்சிகள் தவிர மற்ற காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டதாக படத்தின் இயக்குநர் பூபதி பாண்டியன் தெரிவித்தார்.
Sunday, April 28, 2013
Subscribe to:
Post Comments (Atom)
Receive all updates via Facebook. Just Click the Like Button Below▼
▼
0 comments:
Post a Comment