Friday, April 12, 2013


டந்த ஒருவார காலமாக காணாமல் போனதாக பரபரப்பை பற்ற வைத்த நடிகை அஞ்சலி நேற்று இரவு ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலையத்தில் ஆஜரானார்.

‘அங்காடித் தெரு’ படத்தில் ஹீரோயினாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை அஞ்சலி. இவர் தனது சித்தி பாரதிதேவியும் டைரக்டர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்துவதாக பரபரப்பு குற்றம் சாட்டினார்.

இதற்கிடையே தெலுங்கு படப்பிடிப்புக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை சித்தப்பா சூரிபாபுவுடன் ஹைதராபாத் சென்றிருந்த அவர் அங்குள்ள தஸ்பல்லா ஓட்டலில் தங்கியிருந்த போது அவருடைய சித்தப்பாவிடம் சொல்லிக் கொள்ளாமல் திடீரென்று மாயமாகிவிட்டார்.
அவரைத் தேடி கண்டுபிடித்து தரவேண்டுமென்று ஹைதராபாத் போலீசில் அஞ்சலியின் அண்ணன் ரவிஷங்கர் புகார் மனு தாக்கல் செய்தார்.

இதேபோல், அவரது சித்தி பாரதிதேவி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். சென்னை மற்றும் ஹைதராபாத் போலீசார் இப்புகார்கள் தொடர்பாக நடிகை அஞ்சலியின் இருப்பிடம் குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இதற்கிடையில், அஞ்சலியின் சித்தி பாரதிதேவி, சென்னை ஐகோர்ட்டில் அஞ்சலியை தேடி கண்டுபிடித்து தரவேண்டும் என ஆட்கொணர்வு மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், நேற்று 12-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு நடிகை அஞ்சலி ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் போலீஸ் முன் ஆஜரானார். இரவு 10.45 மணிக்கு இன்னோவா காரில் ஐதராபாத் துணை போலீஸ் கமிஷனர் சுதிர்பாபு அலுவலகத்துக்கு தனியாக வந்த, அஞ்சலி காரில் இருந்து இறங்கி வேகமாக அலுவகத்திற்குள் சென்றார்.

அங்கு துணை போலீஸ் கமிஷனரிடம் தான் திடீரென்று மாயமானது ஏன் என்பது பற்றி விளக்கி கூறினார். அப்போது சில பரபரப்பான தகவல்களை கூறியிருக்கிறார்.

அதன்படி,மன உளைச்சல், தொடர்ச்சியான ஷூட்டிங் காரணமாக தான் மும்பை சென்றிருந்ததாகவும், இன்று (சனிக்கிழமை) படப்பிடிப்புக்கு வராவிட்டால், அவர் படத்தில் இருந்து நீக்கப்படுவார் என்று தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவர் எச்சரிக்கை செய்ததாகவும் அதனால் தான் தான் போலீசில் ஆஜரானேன் என்றும் கூறியதாக தெரிகிறது.

ஹைதராபாத் போலீசாரின் விசாரணைக்குப் பிறகு நடிகை அஞ்சலி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் இன்று ஆஜராகி விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below