நடிகைகள் அம்பிகா, ராதா இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவி உள்ளன. இருவரும் அக்காள்-தங்கை ஆவர். அம்பிகா 1980 மற்றும் 90களிலும் தமிழ், மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தார். ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன்லால், மம்முட்டி ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார்.
ராதாவும் அதே காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் கலக்கினார். ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகமாகி ஏராளமான ஹிட் படங்களில் நடித்தார். திருமணத்துக்கு பிறகு கணவருடன் மும்பையில் குடியேறினார். அதன் பிறகு நடிக்கவில்லை.
ராதாவுக்கு கார்த்திகா, துளசி என இரு மகள்களும் விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர். ராதாவுக்கு மும்பை, கேரளாவில் சொந்தமாக நட்சத்திர ஓட்டல்கள் உள்ளன. அவரது மகள்கள் கார்த்திகா, துளசி இருவரும் நடிக்க வந்துள்ளார்கள்.
அம்பிகாவும், ராதாவும் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது நிறைய சொத்துக்கள் வாங்கினர். இவர்களுக்கு சொந்தமாக சென்னை வளசரவாக்கத்தில் பல ஏக்கர் பரப்பளவில் ஏ.ஆர்.எஸ். ஸ்டூடியோ என்ற பெயரில் பிரமாண்ட ஸ்டூடியோவும் இருக்கிறது. இந்த ஸ்டூடியோவை இடித்து விட்டு நட்சத்திர ஓட்டல் கட்ட ஏற்பாடு நடப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தான் அம்பிகாவுக்கும் ராதாவுக்கும் சொத்துக்களை பிரிப்பதில் சண்டை மூண்டுள்ளதாக செய்திகள் பரவி உள்ளன. இதனை ராதாவின் மகள் கார்த்திகா மறுத்துள்ளார். அவர் கூறும்போது,
பெரியம்மா அம்பிகா அமெரிக்கா போய்விட்டு சமீபத்தில்தான் திரும்பியுள்ளார். எப்போதும்போல் நாங்கள் ஒன்றாக சந்தோஷமாக இருக்கிறோம். எங்கள் குடும்பம் பற்றி தேவையில்லாமல் இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருகிறார்கள் என்றார்.
0 comments:
Post a Comment