Thursday, April 25, 2013


டெடிபியர் பொம்மையை கொடுத்து காதலியை கவர்ந்த இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், விரைவில் அவரை மணக்க உள்ளார்.

‘வெயில்‘, ‘குசேலன்‘, ‘ஆயிரத்தில் ஒருவன்‘ உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் ஜி.வி.பிரகாஷ். தனது இசையில் பாட வந்த பாடகி சைந்தவியை காதலிக்கிறார். இவர்கள் திருமணம் வரும் ஜூன் மாதம் 27ம் தேதி சென்னையில் நடக்கிறது. சைந்தவியை காதலித்த அனுபவம் பற்றி பிரகாஷ் கூறியதாவது:

நான் 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் சைந்தவி 8 வகுப்பு படித்து வந்தார். அப்போதே அவர் மீது எனக்கு காதல் பிறந்துவிட்டது. எனது காதலை அவரிடம் வெளிப்படுத்தினேன். டெடிபியர் கரடிபொம்மை இரண்டை அவருக்கு பரிசளித்தேன். அதை தொட்டால் உடனே ‘ஐ லவ் யூ‘ என்று சொல்லும். இப்படித்தான் எனது காதலை தெரிவித்தேன். அவருக்கும் என்னை பிடித்திருந்தது. அடிக்கடி எனக்கு போன் செய்வார். மனம் விட்டு பேசி காதலர்களாக ஆனோம். 

கடந்த 12 வருடமாக எங்கள் காதல் வளர்ந்துவந்தது. வாழ்க்கையில் நிலையான ஒரு இடத்தை பிடித்தபிறகே திருமணம் செய்ய முடிவு செய்தோம். இப்போது எல்லோருக்கும் தெரிந்த ஒரு இசை அமைப்பாளராக நான் இருக்கிறேன். சைந்தவி பாடகியாக இருக்கிறார். திருமணத்துகான வயதும் வந்துவிட்டது. எனவே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம்.இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் கூறினார்.


0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below