சமீபத்தில் ரிலீஸாகி வந்த வேகத்திலேயே பெட்டிக்குள் போய்விட்ட காவியப்படமான “பட்டுவண்ண ரோஜாவாம் என்ற படத்தில் நடித்த நடிகை இந்திரா தனது கணவர் குறித்த ஒரு அதிர்ச்சியான புகாரை இன்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் கொடுத்துள்ளார்.
அதாவது தனது கணவர் சதீஷ்குமார், தனது நண்பர்களுக்கும் சேர்த்து படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு தன்னை கட்டாயப்படுத்துவதாகவும், தினம், தினம் தனது கணவராலும், அவருடைய நண்பர்களாலும் தான் செக்ஸ் டார்ச்சரால் துன்பப்படுவதாகவும் இதிலிருந்து தன்னை விடுவிக்குமாறும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் வந்த சிறிது நேரத்திற்கு சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த நடிகை இந்திராவின் கணவர் சதீஷ்குமார், நடிகை இந்திரா தன் மீது அபாண்டமான புகார் கூறியுள்ளதாகவும், அவர் ஏற்கனவே வேறொருவருடன் திருமணம் ஆனவர் என்றும், அது தனக்கு சமீபத்தில்தான் தெரியவந்தது என்றும், அதை தட்டி கேட்டதற்குதான் இவ்வாறு என் மீது பொய்ப்புகார் கூறியதாகவும் புகார் அளித்துள்ளார்.
அடுத்தடுத்து நடிகையும், நடிகையின் கணவரும் புகார்கள் கொடுத்துள்ளதால் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் இன்று பரபரப்பாக இருந்தது.
0 comments:
Post a Comment