Tuesday, April 30, 2013


மகாத்மா என்று இந்திய மக்கள் கொண்டாடும் காந்தி தனது ஆசிரமத்தில் இருந்த பெண்களை நிர்வாணமாக தன்னுடன் படுக்குமாறு கூறியதாக கிராக்கெட் டாட் காம் என்ற அமெரிக்க இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க இணையதளமான கிராக்கட் டாட் காம் மகாத்மாக காந்தி குறித்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், பல போராட்டங்கள் நடத்தி இந்தியாவுக்கு சதந்திரம் வாங்கிக் கொடுத்த மகாத்மா காந்தியை புனிதராக மக்கள் கொண்டாடுகின்றனர். ஆனால் அவர் தனது 70 வயதில் கூட இளம் பெண்களை நிர்வாணமாக ஆடையின்றி இருக்கும் தன்னுடன் படுத்து தூங்குமாறு கூறியுள்ளார்.
காந்தி ஆசிரம விதிப்படி அங்குள்ள பெண்கள் ஆடையின்றி காந்தியுடன் தூங்க வேண்டும். 

ஆசையை வெல்ல அவர் இவ்வாறு செய்தாராம். காந்தி வங்கம் சென்றபோது தனது 18 வயது உறவுக்கார பெண்ணை தன்னுடன் ஆடையின்றி தூங்கச் செய்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்திக்கு கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், காந்தியை பற்றிய பிற சர்ச்சைகள் குறித்து இன்னொரு பத்திரிக்கையின் இணையத்தளம் வெளியிட்டுள்ள தகவல்கள்…

ஹிட்லருக்கு கடிதம்

காந்தி ஹிட்லருக்கு எழுதிய கடிதத்தில், உங்கள் நாட்டின் மீது நீங்கள் கொண்டுள்ள பற்றை நாங்கள் ஒரு போதும் சந்தேகித்தது இல்லை. மேலும் உங்கள் எதிர்ப்பாளர்கள் கூறுவது போன்று நீங்கள் ஒரு அரக்கன் என்று நாங்கள் நம்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

காந்தி ஒரு ‘கே’

காந்தி ஒரு ஓரினச் சேர்க்கையாளராக இருப்பாரோ என்ற சந்தேகத்தை அண்மையில் வெளியான சில கடிதங்கள் வலுப்படுத்தியுள்ளன. தென்னாப்பிரிக்க பாடி பில்டர் ஹெர்மன் காலன்பாக் மற்றும் காந்தி இடையேயான கடிதங்கள் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகின்றன.

காந்திக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை?

காந்தியின் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. ஆனால் காந்திக்கு ஏன் அந்த நோபல் பரிசு கிடைக்கவில்லை என்பதும் சர்ச்சையாக உள்ளது.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below