மும்பை: பொதுவாக பிரபலங்கள் தங்களது புகழ் வெளிச்சம் தங்கள் வாரிசுகள் மீது விழாதவாறு கவனமாக இருப்பார்கள்.
அதிலும் பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் அவர்களது புகைப்படம் வருவதைக் கூட விரும்ப மாட்டார்கள்.
ஒன்றரை வயதாகும் தன் மகளைக் கூட ஐஸ்வர்யாராய் இத்தனை நாள் இப்படித்தான் பொத்திப் பொத்தி இத்தனை நாள் பாதுகாத்து வந்தார். தற்போது என்ன நினைத்தாரோ, சுதந்திரமாக பத்திரிக்கை நண்பர்களை தன் மகளை படமெடுக்க அனுமதித்துள்ளார்.
அப்போது எடுக்கப் பட்ட புகைப்படம்தான் இவை.
முகத்திற்கு முக்காடிடாத குட்டி தேவதை...
முழுவதுமாக குழந்தையை மறைத்தே வந்த ஐஸ்வர்யா, முதன் முறையாக சுதந்திரமாக படமெடுக்க அனுமதித்தார்.
நாங்க டூர் போயிட்டு வாரோம்...
அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து மகள், மனைவியோடு திரும்பிய அபிஷேக்பச்சன் ... மீடியா வளைத்துக் கட்டி படமெடுக்கிறார்கள்.
அப்பா முன்னாடி...
அப்பா அபிஷேக் முன்னால் செல்ல, அம்மா ஐஸ்வர்யா ராயின் கையில் அழகுப்பதுமை ஆராத்யா...
பட்டாம்பூச்சியாய் படபடத்தன கண்கள்...
அபிஷேக்கையும், ஐஸ்வர்யாவையும் கலந்து செய்த குட்டி, குயூட் அழகியாய், மிரட்சியுடன் கூட்டத்தை வேடிக்கை பார்க்கிறாள் ஆராத்யா.
மின்னலைப் பிடித்து...
காற்றாய்... மின்னலாய் ஏர்போர்ட்டை கடந்தது அந்த குட்டிச் செல்லம்
வரவேணும் பாப்பா...
ஐஸ்வர்யாவின் பெற்றோர் வந்திருந்தனர் குட்டிப்பாப்பாவை வரவேற்க.. காரில் அழைத்துச் செல்ல...
ஆறு வருடங்கள் ஓடி விட்டன...
தங்களது ஆறாவது திருமண நாளை வெளிநாட்டில் மகளோடு கொண்டாடிய உற்சாகம் ஐஸ்-அபிஷேக் இருவரது முகத்திலும் தெரிகிறது.
நா பொறுப்பான மம்மி...
'என் குழந்தையுடன் இருக்கும் நேரங்கள் எனது சொர்க்கம். அவளை பாதுகாப்பது என் கடமை' என தெரிவித்துள்ளார் ஐஸ்.
அம்மா பெர்த்டேயில் பாப்பா அறிமுகம்...
ஐஸ்வர்யா ராயின் பிறந்தநாளின் போது தான் முதன் முதலாக மீடியாவால் ஆரத்யாவை பார்க்க முடிந்தது.
0 comments:
Post a Comment