Thursday, April 18, 2013


லண்டனில் டி.வி. நடிகையை கற்பழித்த இந்திய இளைஞருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறையில் அடைத்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த சோபி ஜான் என்ற இளைஞர் லண்டன் வெம்ப்ளி என்னுமிடத்தில் படித்து வந்தார். அங்குள்ள ஒரு ஓட்டலில் பகுதிநேர போர்ட்டராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் அந்த பிரபல ஓட்டலில் தொலைக்காட்சி நடிகை ஒருவர் தனது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். அப்போது நண்பர்களுடன் சேர்ந்து அதிக மது அருந்திய பின்னர் தனது அறையில் தூங்கிவிட்டார்.

அப்போது சோபி ஜான், மற்றொருவரின் கீ கார்டை பயன்படுத்தி, டி.வி.நடிகை இருந்த அறைக்குள் புகுந்து அவரை கற்பழித்து விட்டார். இது தொடர்பான வழக்கு சௌத்வார்க் கிரௌன் கோர்ட்டில் நடந்தது.

இந்த விசாரணை முடிவடைந்த நிலையில், சோபி ஜான் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அதிகம் குடித்திருந்த நிலையில் அவரால் ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிந்து கொண்டு வேண்டுமென்றே அந்த நடிகையின் அறைக்குள் புகுந்து சோபி ஜான் பலாத்காரம் செய்திருக்கிறார். எனவே அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க உத்தரவிடுவதாக நீதிபதி அலிஸ்டர் மிக்ராத் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட சோபி ஜான், தண்டனைக் காலம் முடிந்த பிறகு இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below