மைக்கேல் ஜாக்சனின் மூத்த மகன் பிரின்ஸ், குவைத் நாட்டு இளவரசி ரெமி அல்பலாவுடன் டேட்டிங்கில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெலியாகியுள்ளன.
இருவரும் இணைந்து நியூயார்க்கில் பவுலிங் விளையாட்டில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இந்த கிசுகிசு கிளம்பியுள்ளது. கருப்பு நிற சொகுசுக் கார் ஒன்றில் அல்பலாவை, பிரின்ஸ் அழைத்து வந்ததும், பின்னர் இருவரும் இணைந்து வீட்டுக்குக் கிளம்பியதும் தற்போது காட்டுத் தீயாக பரவியுள்ளது.
பிரின்ஸூக்கு தற்போது 16 வயதாகிறது. இவரது தந்தை ஜாக்சன் இல்லை என்று முன்பு தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின என்பது நினைவிருக்கலாம். தற்போது குவைத் இளவரசியுடன் காதலில் வீழ்ந்திருக்கிறார் பிரின்ஸ் என்பதுதான் ஹாட் செய்தியாகியுள்ளது. இருவரும் இணைந்து டேட்டிங் போவதாகவும் செய்திகள் கூறுகின்றன.
இந்த விவகாரம் குறித்து குவைத் தூதரகம் கூறுகையில், பிரின்ஸ் படிக்கும் அதே பள்ளியில்தான் அல்பலாவும் படிக்கிறார். பிரின்ஸை விட ஜீனியர் அல்பலா.
மற்றபடி வேறு எதுவும் இல்லை என்று தூதரகம் கூறுகிறது.
0 comments:
Post a Comment