Friday, April 26, 2013


டைரக்டர் கே.பாக்யராஜும், சாந்தனுவும் ஏதாவது பொதுநிகழ்ச்சியில் கலந்து கொள்வது அரிதிலும் அரிதானது தான். ஆனால் அதையும் மீறி இரண்டு பேரும் கலந்து கொள்ள நேர்ந்தால் அங்கு நடக்கும் சம்பவங்களும், உரையாடல்களும் செம காமெடியாக இருக்கும்.

அப்படித்தான் சில வருடங்களுக்கு முன்பு பாக்யராஜ் டைரக்ட் செய்த சித்து +2 படத்தின் பிரஸ்மீட்டில் இரண்டு பேரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவங்களைச் சொன்ன போது ஒட்டுமொத்த மீடியாவும் விழுந்து விழுந்து சிரித்தன. ஒரு காமெடி எபிசோடே போடலாம் என்கிற அளவுக்கு இருந்தன அந்த பிரஸ்மீட்டில் அவர்கள் சொன்ன சமாச்சாரங்கள்.

அதற்குப் பிறகு பாக்யராஜ் தனது மகன் சாந்தனுவுடன் சமீபத்தில் ஒன்றாக கலந்து கொண்ட ‘குகன்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷனிலும் நடந்த சம்பவங்கள் காமெடியாக இருந்தன.
அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. அப்பா பாக்யராஜ் அருகில் இருந்தது தெரியாமலேயே அவரது மகனும் ஹீரோவுமான சாந்தனுவை நமீதா இருட்டில் கட்டிப்பிடித்தது....

அந்த சுவாரஷ்யமான சம்பவத்தை பாக்யராஜ் அவர்களே சொல்கிறார் கேளுங்கள்...
இந்த பங்ஷனுக்கு வந்ததுல இன்னொரு சந்தோஷம் எனக்கு கிடைச்சிருக்கு.
இந்த நவரச உணர்வுன்னு சொல்வாங்கள்ல சந்தோஷம், ஆச்சரியம், அதிர்ச்சி,பயம் இப்படி அது எல்லாமே எனக்கு இங்க கெடைச்சிருச்சி.

அதுல அதிர்ச்சிக்கு இங்க நடந்த ஒரு சம்பவத்தை சொல்றேன்.
இங்க உள்ள வந்த உடனே படத்தோட பாடல்கள், ட்ரெய்லர் போட்டாங்க, அதை பார்த்துக்கிட்டிருந்தேன், பக்கத்துல என் பையன் உட்கார்ந்துகிட்டிருந்தான். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு. ஏன்னா ரெண்டு பேரும் இந்த மாதிரி எந்த நிகழ்ச்சிக்கும் அதிகமா சேர்ந்து போனது இல்லை.

அதுவும் இந்த நிகழ்ச்சியில நாங்க ரெண்டு பேரும் பக்கத்துல, பக்கத்துல உட்கார்ந்திருந்ததால போட்டோகிராபர்ஸ் எல்லாம் டக்கு டக்குன்னு போட்டோ எடுத்தாங்க. அதைப்பார்த்த எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு.

அப்புறம் பாடல்கள் ஓடிக்கிட்டிருந்த நேரத்துல இருட்டுல யாரோ ஒருத்தர் என் பையன் சாந்தனு பக்கத்துல வந்து நின்னாங்க... வந்த உடனே என் பையனை கட்டிப் பிடிக்கிற மாதிரியே ரெண்டு கைகளையும் தூக்கிக்கிட்டு வந்தாங்க...

உடனே என் பையன் யார்றா அது? நாம எந்திரிக்கிறதா..? வேண்டாமா?ங்கிற யோசனையிலேயே அரைகுறையா கையை தூக்குறான். ஆனா அவங்க விட மாட்டேங்கிறாங்க.. அப்படியே ரெண்டு பேரும் கட்டி பிடிக்கிறாங்க... அதுக்கப்புறம் அவங்க சாந்தனு பக்கத்திலேயே உட்கார்ந்திட்டாங்க.
இருட்டுல அவங்க யாருன்னே எனக்கு தெரியல, ஆனா அவங்க ஒரு பொம்பளைன்னு மட்டும் தெரிஞ்சது.

அப்புறம் பாடல் முடிஞ்ச பிறகு லைட்டை போட்டாங்க, அப்புறம் தான் தெரிஞ்சது சாந்தனுவை கட்டிப்பிடிச்சது நமீதான்னு.

பிறகு என் பையன் தலையைக் குனிஞ்சவன் குனிஞ்சவன் தான்...நிமிரவே இல்ல...
அப்புறம் நமீதாவுக்கும் அதிர்ச்சி, நான் பக்கத்துல இருந்ததை கவனிக்காததால “ ஸாரி சார் நீங்க இருக்கிறதை நான் கவனிக்கலே”ன்னு சொன்னாங்க...
உடனே நான், பரவாயில்ல “நீங்க என்ன பண்ணுனீங்கன்னு நான் கவனிச்சிட்டேன்”னு சொன்னேன் என்றார்.

பாக்யராஜ் சொன்னதை கேட்ட விழாவுக்கு வந்த மொத்த கூட்டமும் விழுந்து விழுந்து சிரிக்க, அந்த சந்தோஷ மூடிலேயே ‘குகன்’ ஆடியோ பங்ஷன் சிறப்பாக நடந்து முடிந்தது.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below