சென்னை: கும்கு நாயகி லக்ஷ்மி மேனனுக்கு பிடித்த நடிகர் என்றால் அது சூர்யா தானாம்.
சுந்தரபாண்டியன் படம் மூலம் கேரளாவில் இருந்து தமிழ் திரையுலகிற்கு வந்தவர் லக்ஷ்மி மேனன். குடும்பப்பாங்கான பெண் என்று பெயர் எடுத்த அவர் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்த கும்கி படம் ஹிட்டானது.
சுந்தரபாண்டியன் படம் மூலம் கேரளாவில் இருந்து தமிழ் திரையுலகிற்கு வந்தவர் லக்ஷ்மி மேனன். குடும்பப்பாங்கான பெண் என்று பெயர் எடுத்த அவர் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்த கும்கி படம் ஹிட்டானது.
முதல் படமும் சரி இரண்டாவது படமும் சரி ஹிட்டானதால் அவருக்கு தமிழ் திரையுலகில் கிராக்கி அதிகமாகிவிட்டது. இந்நிலையில் தமிழ் சினிமா பற்றி மனம் திறந்துள்ளார் லக்ஷ்மி. அவர் கூறுகையில், மலையாள சினிமாவை விட தமிழ் சினிமா தான் எனக்கு மிகவும் பிடிக்கும்.
தமிழ்நாடு தான் என்னை அடையாளம் காட்டியது. அதனால் தமிழ் படங்களுக்கு தான் முன்னுரிமை அளிப்பேன். ரஜினிகாந்தின் ஸ்டைல் பிடிக்கும். மங்காத்தாவில் அஜீத் பிடிக்கும். ஆனால் எனக்கு மிகவும் பிடித்தவர் சூர்யா தான் என்றார்.
0 comments:
Post a Comment