Friday, June 7, 2013

இன்று கணினி வைத்திருப்பவர்கள் என்று இல்லாமல் அனைவருக்கும் இருக்கும் ஒரு பெரிய சிக்கல் என்ன வென்றால் சி.டி தான். சி.டி யில் நாம் நம்முடைய போடோக்களிலிருந்து, பிறந்தநாள் நிகழ்சிகள், திருமண நிகழ்சிகள், நமது தனிப்பட்ட விஷயங்கள் அவரைக்கும் பதிவு பண்ணி பாதுகாத்து வருகிறோம். ஆனால், இதிலும் ஒரு பெரிய சிக்கல் வந்து விடும்.

அதுதான் சி.டி.கள் மோசமாகி போவது அதாவது சி.டி களில் சிக்கல் ஏற்பட்டு விடும் உராய்வு, தூசு படித்தல் போன்ற பல காரணங்களால் சி.டியில் இருக்கும் தகவல்களை நாம் பெற முடியாத சூழல் ஏற்படும். அப்போது தான் நாம் அதிகமாக பாதிக்கப்படிகிறோம். நாம் ஆசை ஆசையாக சேமித்து வைத்த வீடியோக்கள். அனைத்தும் வீணாகி போகும் பொது அதனால் நாம் அடையும் பாதிப்பு மிக மிக அதிகம். இப்படி பட்ட சிக்கல் சி.டி.க்களில் இருந்து தகவல்களை எவ்வாறு பெறலாம் என்பதை பார்க்கலாம்....

வேறொரு சி.டி.யில் இருந்து தகவல்களை, வீடியோக்களை காப்பி செய்து கொண்டு வந்து நமது கணினியில் போட்டு பார்த்தல்,அல்லது நமது சி.டி.க்களை போட்டு பார்த்தால் cannot read from the source destination என்று கணினியில் பதில் வரும்.

சி.டி.யில் நமக்கு தெரியாமல் ஏற்பட்டிருக்கும் கீறல்கள், பதிந்திருக்கும் தூசுக்களால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

எனவே, முதலில் மெல்லிய துணி கொண்டு சி.டி.க்களை உள்ளே இருந்து வெளிப்புறமாக துடைக்க வேண்டும். சோப்பு கலந்த நீரில் போட்டு கழுவவும் செய்யலாம். அதன் பிறகும் சிக்கல்கள் ஏற்பட்டால் கீழே இருக்கும் வழிமுறைகளை கையாளலாம்.

நீங்கள் இந்த இணையத்தளம் வழங்கும் மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பிறகு பிறகு மென்பொருளின் ஆய்வுக்கு சி.டி.யை உட்படுத்த வேண்டும். அப்போது இந்த மென்பொருள் பாதிக்கப்பட்ட சி.டி.யிலுள்ள தகவல்களை பெற்று தரும். அல்லது அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பின் பாதிக்கப்பட்ட பகுதிகளை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகளில் உள்ள தகவல்களை நமக்கு பெற்று தரும்.

இதன் மூலம் நாம் சிக்கல் சி.டி.களில் இருந்தும் தகவல்களை பெறலாம்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below