Tuesday, October 8, 2013

பாலிவுட் நடிகை ஜியா கான் தற்கொலை செய்து கொள்ளவில்லை மாறாக அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவரது தாய் ராபியா அமின்தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை ஜியா கான் கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டிய அவரது காதலன் சூரஜ் பஞ்சோலி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

இந்நிலையில் பெல்ட்டால் கழுத்து நெறிக்கப்பட்டு ஜியா கான் மரணம் அடைந்துள்ளதாக தடயவியல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே ஜியா கான் இறந்த பின் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை அவரது தாய் ராபியா வெளியிட்டுள்ளார்.


நடிகை ஜியா கானின் கழுத்து பெல்ட்டால் நெறிக்கப்பட்டதற்கான ஆதாரம் அவரது உடலில் இருந்ததாக தடயவியல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜியா கான் பெல்ட்டால் கழுத்தை நெறிக்கப்பட்ட பிறகே தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளார் என்று ராபியாவின் வழக்கறிஞர் தினேஷ் திவாரிதெரிவித்துள்ளார்.

துப்பட்டாவால் தூக்கு போட்டுக் கொண்டவரின் கழுத்தில் இவ்வளவு ஆழமான காயம் எப்படி ஏற்பட்டது என்ற கேள்வி எழுகிறது. ஜியா கான் மரணம் கொலை என்றும், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறி அவரது தாய் ராபியா மும்பை உயர் நீதிமன்றத்தில் கடந்த 1ம் தேதி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

ஜியா பிணமாகத் தொங்கிய அறைக்கு பக்கத்து அறையில் ரத்தம் கிடந்ததாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

வீட்டில் ஏசி ஓடியபோதும் ஜன்னல் திறந்துள்ளது. அதனால் ஜன்னல் வழியாக யாராவது வந்து ஜியா கானை கொன்றிருக்கலாம் என்று அவரது தாய் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.








08 Oct 2013

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Receive all updates via Facebook. Just Click the Like Button Below