நடிகர் அஜித் குமார் தான் புதிதாக வாங்கிய பிஎம்டபுள்யூ பைக்கில் கடந்த வாரம் சென்னையில் இருந்து பெங்களூர் சென்றுள்ளார்.
ரேஸ் சூட்டில் சென்னையில் இருந்து கிளம்பிய அவர் ரோட்டோரக் கடை ஒன்றில் வண்டியை நிறுத்திவிட்டு சாப்பிட்டார்.
அங்கு ரோட்டோரக் கடையில் அஜித்தை பார்த்துவிட்டு அங்கு ஏராளமான ரசிகர்கள் கூடிவிட்டனர்.
அதன் பின்பு அவர் பெங்களூர் சென்றுள்ளார்.
அப்போது தமிழக-கர்நாடக எல்லையில் போக்குவரத்து பொலிசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் அஜித்தின் பைக்கை நிறுத்தி உரிய ஆவணங்களை கேட்டுள்ளனர். ஹெல்மெட்டை கழற்றியதும் பைக்கில் இருந்தவர் அஜித் என்பதை பார்த்த பொலிசார் ஆச்சரியப்பட்டுள்ளனராம்.
பின்பு அஜித் உரிய ஆவணங்களை காண்பித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
0 comments:
Post a Comment