Wednesday, June 5, 2013

போட்டோ மற்றும் படங்களில் எப்படி எழுத்துக்களுடன் கூடிய சொற்களை அமைப்பது என்று பல வாசகர்கள் அடிக்கடி கேட்கின்றனர். இதில் பெரும்பாலானவர்கள், படங்களை வேர்ட் ஆவணங்களில் பதிக்கையில், அதன் மீது சொற்களுடன் பதிக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதற்கு வேர்ட் தொகுப்பினைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் போட்டோ ஷாப் தொகுப்பு, எளிதான வழிகளைத் தருகிறது.

போட்டோ ஷாப் தொகுப்பிற்குப் பதிலாக, அதன் அண்மைக் கால புதிய தொகுப்புகளையும் பயன்படுத்தலாம். அத்தொகுப்புகளில் அதற்கான வழிகளை இங்கு காணலாம்.

படங்கள் அல்லது போட்டோக்களில் சொற்களை அமைக்க நமக்கு கற்பனைத் திறனும், போட்டோஷாப் தொகுப்பும் தான் தேவை. இங்கு எப்படி படங்களில் அவற்றை அமைத்து, நம் கற்பனைத் திறனுக்கு ஒரு வடிவம் கொடுப்பது எனப் பார்க்கலாம். இதன் மூலம் படங்களை வாழ்த்து அட்டைகளாகவும், இலச்சினைகளாகவும், போஸ்டர்களாகவும், போட்டோக்களை நிறுவனத் தகவல் குறிப்புகளுடன் இணைக்கும் வகையிலும் அமைக்கலாம். எனவே முதலில் இதற்கேற்ற போட்டோக்கள் , படங்கள் அல்லது கார்ட்டூன் படங்களைத் தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர்

1. அடோப் போட்டோஷாப் அல்லது சார்ந்த தொகுப்பைத் திறக்கவும். பின் அதன் பைல் மெனு வழியாகக் குறிப்பிட்ட பட பைலைத் திறக்கவும். 

2. டூல் பாரில் டெக்ஸ்ட் டூலைனித் தேர்ந்தெடுக்கவும். இது மிக எளிது. டூல்பாரில் கூ என்ற எழுத்தின் மீது கிளிக் செய்தால் போதும்.

3. அடுத்து, இந்த டூல்பாரில் கீழாக அமைக்கப்பட்டுள்ள மேல் இரண்டு சதுரங்களில் கிளிக் செய்திடவும். இதில் மேலாக உள்ள சதுரக் கட்டம் முன்புற வண்ணத்தைக் குறிக்கிறது. இது உங்கள் எழுத்தின் வண்ணமாக இருக்கும். படத்தின் வண்ணம், டெக்ஸ்ட் அமைய இருக்கும் இடத்தில் உள்ள வண்ணம் ஆகியவற்றை அனுசரித்து, எழுத்துக்களுக்கான வண்ணத்தினைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்திடவும். 

4. படத்தில் எந்த இடத்தில், நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட்டை அமைத்திட வேண்டுமோ, அந்த இடத்தில் கிளிக் செய்திடவும். இப்போது டயலாக் பாக்ஸ் ஒன்று திறக்கப்படும். 

5. இங்கு எழுத்து வகை, ஸ்டைல், அளவு மற்றும் அலைன்மென்ட் ஆகியவற்றை அதன் பட்டியல்களில் இருந்து தேர்ந்தெடுக்கவும். பின்னர் டயலாக் பாக்ஸில் கிளிக் செய்து, நீங்கள் விரும்பிய டெக்ஸ்ட்டை அமைக்கவும். முழுவதும் டெக்ஸ்ட் அமைத்த பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். 

6. அடுத்து, டெக்ஸ்ட் ஏரியா மீது மவுஸின் இடது பட்டனை அழுத்திப் பிடித்துக் கொள்ளவும். டெக்ஸ்ட்டின் சுற்றுப்புற பார்டர் லைன், நகரும் எறும்புகள் போலத் தோற்றமளிக்கும். மவுஸைப் பிடித்தவாறே இந்த டெக்ஸ்ட் கட்டத்தினை நகர்த்தி, விரும்பும் இடத்தில் கொண்டு சென்று வைக்கவும். டெக்ஸ்ட்டில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டுமானால், கர்சரை நகர்த்தி அமைக்கலாம். முழுவதும் நீக்க வேண்டும் எனில், பைல் மெனுவில் கிளியர் தேர்ந்தெடுத்து என்டர் செய்திடலாம். ஒன்று அல்லது இரண்டு எழுத்துக்கள் எனில், அவற்றைத் தேர்ந்தெடுத்து, டெலீட் பட்டன் அழுத்தலாம். 

7. டெக்ஸ்ட் அமைக்கும் வேலை முடிந்த பின்னர், பைல் மெனுவில் சேவ் அல்லது சேவ் அஸ் தேர்ந்தெடுத்து, புதிய பெயர் கொடுத்து பதிந்து கொள்ளவும். 

சில டிப்ஸ் தரட்டுமா!

முதலில் கூறியபடி, படத்திலிருந்து டெக்ஸ்ட் மாறுபட்டு இருக்கும் வகையில், அதன் வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும். படத்தின் பின்னணி நிறம் டார்க்காக இருந்தால், மென்மையான வண்ணத்தில் டெக்ஸ்ட்டை அமைக்கவும். மிதமான வண்ணத்தில் படம் இருந்தால், டார்க் கலரில் எழுத்துக்களை அமைக்கவும். 

டெக்ஸ்ட் அமைத்த பின்னர், முற்றிலும் வேறு பெயரில் பட பைலை சேவ் செய்திடவும். இதன் மூலம், ஒரிஜினல் படத்தினை காப்பாற்றி வைத்துக் கொள்ளலாம். 

அடோப் போட்டோஷாப் தொகுப்பு தரும் Vertical Alignment Option–ஐப் பயன்படுத்தி, டெக்ஸ்ட்டை நெட்டு வாக்கில் அமைக்கலாம்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below