கொலிவுட்டில் வெளியான சேட்டை படத்தில் இடம்பெற்ற சந்தானத்தின் நகைச்சுவைக் காட்சிகள் அனைத்துமே நம்மை முகம் சுளிக்க வைத்தது.
நகைச்சுவை என்ற பெயரில் நாற்றமடிக்கும் காட்சிகளே அந்த படத்தில் இடம் பெற்றிருந்தன.
இந்நிலையில் சேட்டை பட கொமடி மாதிரி இனி நடிக்கமாட்டேன் என்று சந்தானம் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் மேலும் கூறுகையில், சேட்டை படத்துல நான் கொஞ்சம் எல்லையை தாண்டிட்டேன்.
காலேஜ் பொன்னுங்க எல்லாரும் என் கொமடிய ரசிச்சிட்டு வர்ற நேரத்துல அந்த படத்துல வந்த மாதிரியான கொமடிய நான் பண்ணியிருக்கக் கூடாது.
இனி, பெண்கள் முகம் சுளிக்கிற அளவு நடிக்க மாட்டேன். யாரையுமே கொச்சைப்படுத்தாத கொமடி தான் இனி பண்ணுவேன்.
இனிமே, நான் எப்படிப்பட்ட பாதையில போகணும்கறதுல கவனமா இருக்கேன் என்றார்.
0 comments:
Post a Comment