Wednesday, June 5, 2013

இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த 4 பேரை பொலிசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் இருந்து ஒரு குடும்பத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் உள்பட 5 பேர் காளஹஸ்தி சிவன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்று மாலை வந்தனர்.

அவர்கள் கோயில் அருகே சன்னதி வீதியில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினர்.

குளியல் அறையில் இளம்பெண் குளித்துக் கொண்டிருந்தபோது, ஜன்னல் வழியே யாரோ செல்போனில் படம் பிடிப்பதை உணர்ந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். வெளியே வந்து பெற்றோரிடம் விஷயத்தை கூறினார்.

இதுகுறித்து அவர்கள் காளஹஸ்தி நகர காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சாமி வழக்குப் பதிவு செய்து விடுதி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் விடுதி ஊழியர்களான காளஹஸ்தி மண்டலம் முச்சிவேயல் கிராமத்தை சேர்ந்த நாகராஜ்(22), அரிபாபு(19), சுப்பிரமணியம்(30), கோபால்(24) ஆகிய 4 வாலிபர்கள் செல்போனில் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை கைது செய்த பொலிசார், அவர்களிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். சம்பந்தப்பட்ட வீடியோவை பொலிசார் அழித்து விட்டனர்.

இதேபோல் வேறு பெண்களை ஊழியர்கள் வீடியோ எடுத்துள்ளார்களா என பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below