தனது மார்க்கெட் சரியத் ஆரம்பித்துள்ளதால் ஹன்சிகா விஜய், அஜித் படங்களில் நடிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறாராம்.
ஹன்சிகா விஜய்யுடன் சேர்ந்து வேலாயுதம் படத்தில் நடித்த பிறகு தான் மளமளவென வாய்ப்புகள் வந்து குவிந்தன. அதன் பிறகு தான் அவருக்கு சூர்யா போன்ற நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்தநிலையில் தற்போது ஹன்சிகா கையில் முன்னணி கதாநாயகர்களின் படங்கள் எதுவும் இல்லை. தனது மார்க்கெட் சரியத் தொடங்கியுள்ளதை அவர் உணர்ந்துவிட்டார்.
குறிப்பாக லக்ஷ்மி மேனனின் அசுர வளர்ச்சியைக் கண்டு ஆடிபோயுள்ள ஹன்சிகா தெலுங்கிலும் கவனம் செலுத்திவருகிறார்.
தெலுங்கிலும் அவருக்கு சரியான போட்டியாக நஸ்ரியா நஸீம் இருப்பார் என்று வேறு கூறப்படுவதால் அவர் சற்று கலங்கித் தான் உள்ளார்.
0 comments:
Post a Comment