வெளிநாட்டுப் படப்பிடிப்பின்போது என் அம்மாவுக்கு தனி ரூம் கேட்டு நான் தகராறு செய்ததாக வந்த செய்தியில் உண்மையில்லை.
அந்த அளவு கீழ்த்தரவமானவள் இல்லை நான், என்றார் நடிகை த்ரிஷா. சுவிட்சர்லாந்தில் என்றென்றும் புன்னகை படப்பிடிப்பின்போது த்ரிஷாவின் அம்மாவுக்கு தனியாக ரூம் ஒதுக்கவில்லை என்று த்ரிஷா தகராறு செய்ததாக தகவல் வெளியானது. தனி ரூம் கொடுத்த பிறகுதான் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக வந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறாமலிருந்தார் த்ரிஷா.
இப்போது படப்பிடிப்பு முடிந்து சென்னைக்கு திரும்பிய த்ரிஷா இதுகுறித்து வாய்திறந்துள்ளார். அவர் கூறுகையில், ” சுவிட்சர்லாந்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் மூன்று வாரங்களுக்கு மேல் தங்கியிருந்து படப்பிடிப்பையும் ஒரு விளம்பரப் படத்தையும் முடித்துக் கொடுத்தவிட்டு சென்னை திரும்பியுள்ளேன்.
நான் எந்த அளவு ஒத்துழைப்பு கொடுத்து நடித்தேன் என்பதை படப்பிடிப்புக் குழுவினரை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். என் அம்மாவுக்கு நான் தனி ரூம் கேட்கவே இல்லை. அப்படி கேட்டு தகராறு செய்யும் அளவுக்கு நான் கீழ்த்தரமானவள் இல்லை,” என்றார்.
0 comments:
Post a Comment