சமந்தா, கடந்த ஒரு ஆண்டாக தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். தோல் சிகிச்சைக்காக, ஒரு ஆண்டுக்கு முன், சில நாட்கள் ஓய்வில் இருந்தவர், அதற்கு பின், “ஆட்டோ நகர், யெட்டோ வெள்ளிப் போயிந்தி மனசு உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருவதால், ரொம்பவும் களைப்பாக இருக்கிறாராம்.
அவர் கூறுகையில், “இந்த மே மாதம் வந்தாலே, ரொம்ப பீதியாக இருக்கிறது. ஆந்திராவில் அடிக்கும் வெயிலை நினைத்தாலே, பயமாக இருக்கிறது. ஒரு சில நாள் படப் பிடிப்புக்கு பின், கொஞ்சம் இடைவெளி கிடைத்துள்ளது. இந்த ஓய்வை, வெளிநாட்டில் உற்சாகமாக கழிக்கப் போகிறேன். ஆந்திரா வெயிலிலிருந்து, சில நாட்களுக்கு விடுதலை கிடைக்கும்.
வெளிநாட்டுக்கு பறக்கப் போகும் நாள், எப்போது வரும் என, இப்போதே எண்ணத் துவங்கி விட்டேன் என்கிறார்.
0 comments:
Post a Comment