இனி ஆபாசமாக நடிக்க மாட்டேன் என்று நடிகை தமன்னா கூறியுள்ளார். இதுபற்றி தமன்னா அளித்துள்ள பேட்டியில், சினிமாவில் நிறைய கற்றுக்கொண்டேன். முன்பெல்லாம் என் படங்கள் ஓடாமல் போனால் வருத்தப்படுவேன். இப்போது அது இல்லை.
ஒரு படத்தை முடித்ததும் அதை மறந்துவிட்டு அடுத்த படத்துக்கு தயாராகிவிடுகிறேன். ஒவ்வொரு படத்திலும் நான் நடித்த காட்சிகள் நிறைய இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன். பெரிய கமர்ஷியல் படங்களில் 5, 6 சீன்களில் வந்தால் கூட சந்தோஷம்தான்.
இந்தியில் நடிக்கிறேன். இதனால் தென் இந்திய மொழி படங்களில் இனி நடிக்கமாட்டேன் என்று கருத வேண்டாம். தமிழ், தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடிப்பேன். என்னை வளர்த்துவிட்டது தென் இந்திய மொழி படங்கள்தான். விருதுகளை நினைத்து படங்களில் நடிப்பது இல்லை.
விருது கிடைத்தால் சந்தோஷம்தான். சினிமாவில் போட்டி இருப்பது சகஜம்தான். ஆனால் பொறாமை இருக்க கூடாது. இனி ஆபாசமாக நடிக்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளேன், என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment