Wednesday, May 15, 2013


தெலுங்குப் படத்தில் விபச்சாரி வேடத்தில் நடித்ததற்காக வெட்கப்படவில்லை என நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஆங்கிலம் ஆகிய 7 மொழிகளில் இதுவரை 45 படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரேயா.

இப்போது பவித்ரா என்ற தெலுங்குப் படத்தில், அவர் விபசார அழகியாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தை ஜனார்த்தன் மகரிஷி என்பவர் இயக்கியுள்ளார்.

பாலியல் சம்பந்தப்பட்ட கதை என்பதால், இந்த படத்துக்கு தணிக்கை குழுவினர் ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.இதுகுறித்து ஸ்ரேயா கூறுகையில், என்னுடைய சிறந்த படங்களில் ஒன்று பவித்ரா என நான் நம்புகிறேன்.

விபசார அழகியாக நடிப்பதற்கு நான் வெட்கப்படவில்லை. பாலியல் சம்பந்தப்பட்ட கதை என்றாலும், இந்த படத்தில் ஆபாசம் துளி கூட இல்லை.

குறிப்பாக படுக்கை அறை காட்சிகள் இல்லை. படத்தின் கதைப்படி, நான் விபசார அழகியாக இருந்து அரசியல் தலைவர் ஆகிவிடுவேன்.ஏழை - எளிய, ஆதரவற்ற பெண்களை கயவர்களிடம் இருந்து பாதுகாத்து அவர்களுக்கு அடைக்கலம் அளிப்பது போன்ற வேடம் அது என்று தெரிவித்துள்ளார்.








0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below