கொலிவுட்டில் வெளியான பீட்சா பட இயக்குனரின் புதிய படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்கிறார்.‘சுந்தரபாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் லட்சுமிமேனன்.
இவர், ‘கும்கி’ படத்தில் அறிமுகமானாலும் சசிகுமாருடன் நடித்த ‘சுந்தரபாண்டியன்’ படம் தான் முதலில் வெளிவந்தது.
சுந்தரபாண்டியன், கும்கி என இரண்டு படங்களும் லட்சுமிமேனனுக்கு தொடர் வெற்றியை கொடுத்ததால் குட்டிபுலி படத்தில் மீண்டும் சசிகுமாருடன் ஜோடி சேர்ந்தார்.
இந்த படம் வரும் 30ம் திகதி வெளிவருகிறது. இந்நிலையில்‘பீட்சா’ இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக லட்சுமிமேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது விமல் நடிக்கும் ‘மஞ்சப் பை’, கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘சிப்பாய்’, விஷால் நடிக்கும் ‘பாண்டிய நாடு’ என அதிக தமிழ்ப் படங்களில் நடிக்கும் ஒரு நடிகையாக மாறிவிட்டார் லட்சுமி மேனன்.
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கும் லட்சுமி மேனன் குறுகிய காலத்தில் இந்த உயரத்துக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment