Monday, May 6, 2013


தெலுங்கு திரையுலகில் தமன்னாவின் கவர்ச்சியை பார்த்து சமந்தா, அமலாபால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனராம்.தமிழில் நடிக்கும் பல நடிகைகள் தெலுங்கிலும் நடிக்கிறார்கள்.

தெலுங்கு பக்கம் சென்றவுடனேயே கவர்ச்சியை தாராளமாக காட்டி வருகிறார்கள். அந்த பட்டியலில் இணைந்துள்ளார் தமன்னா.மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால் நடித்த வேட்டை படம் தெலுங்கில் தடகா என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.

இதில் சமீரா, அமலா பால் கதாபாத்திரங்களில் ஆண்ட்ரியா மற்றும் தமன்னா ஆகியோர் நடிக்கின்றனர்.இப்படத்தில் தமன்னா காட்டியுள்ள கவர்ச்சியை பார்த்து தெலுங்கு திரையுலகமே ஆடிப் போயுள்ளதாம்.

தடகா படத்திற்காக தமன்னாவுக்கு பெரிய தொகை கொடுக்கப்பட்டுள்ளதால் அவர் தாராளமாக கவர்ச்சி காட்டியுள்ளார் என்று தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் தமன்னாவின் ஓவர் கவர்ச்சியைப் பார்த்து தெலுங்கு திரையுலகில் வலம் வரும் சமந்தா, அமலா பால் போன்றோர் கலக்கத்தில் உள்ளார்களாம்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below