Monday, May 27, 2013

பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு அளவே இல்லை. அதில் முக்கியமானது தான் மார்பகங்கள் மிகவும் பெரியதாக இருப்பது. இவ்வாறு இருப்பதனால், பெண்களால் எந்த ஒரு விருப்பமான ஆடையையும் அணியமுடியாதவாறு போகிறது. மேலும் வெளியே செல்லும் போது, சில ஆண்களின் கண்களை பறிக்கும் அளவு இருக்கிறது. எனவே அதனைக் குறைப்பதற்கு பணம் அதிகம் இருக்கும் பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து கொள்கின்றனர்.

ஆனால் பணம் இல்லாதவர்களின் நிலை என்ன? என்று கேட்கலாம். வேறு என்ன இயற்கை வழிகள் தான். ஆம், இயற்கை வழிகள் மூலமாகவும், மார்பகங்களை சிறிதாக்க முடியும். இவ்வாறு அறுவை சிகிச்சைகள் செய்து, அதற்கான மருந்து மாத்திரைகளை மேற்கொள்வதால், சில சமயங்களில் இது வேறு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தி, உடல் நலத்தையே கெடுத்துவிடும். எனவே எப்போதும் செயற்கை முறைகளை பின்பற்றுவதற்கு முன், ஏதேனும் இயற்கை வழிகள் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். அவ்வாறு இருந்தால், இயற்கை முறைகளையே பின்பற்ற வேண்டும்.

இப்போது அவ்வாறு மார்பகங்கள் பெரியதாக இருந்தால், அவற்றை குறைப்பதற்கான சில இயற்கை வழிகளை கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றி பாருங்கள்.

எடை குறைவு

மார்பகம் பெரிதாக இருப்பதற்கு, அங்குள்ள திசுக்களில் 90% கொழுப்புக்கள் சேர்ந்து இருப்பது தான். ஆகவே மார்பகங்களின் அளவைக் குறைப்பதற்கு சிறந்த வழி, உடலில் சேர்ந்துள்ள கொழுப்புக்களை கரைப்பதற்கு முயற்சிப்பது தான். அவ்வாறு முயற்சிக்கும் போது மார்பகங்களில் உள்ள கொழுப்புக்கள் மட்டும் குறையுமாறு செய்யக்கூடாது. உடல் முழுவதும் சேர்ந்துள்ள கொழுப்புக்கள் அனைத்தும் வெளியேறுமாறு தான் செயல்பட வேண்டும். இவ்வாறு உடல் எடையை குறைப்பதற்கான செயலை மேற்கொண்டால், உடல் எடை குறைவதோடு, மார்பகத்தின் அளவும் குறையும்.

ஏரோபிக் உடற்பயிற்சி

ஏரோபிக் உடற்பயிற்சிகளான ஓடுதல், நீச்சல், பைக் ஓட்டுதல், நடனம் மற்றும் விளையாட்டு போன்றவற்றை மேற்கொள்ளும் போது, இதயத்தின் துடிப்பு நீண்ட நேரம் வேகமாக துடிப்பதால், அவை எடை குறைவுக்கு வழிவகுக்கும். அதிலும் தினமும் குறைந்தது அரை மணிநேரம் செய்ய வேண்டும்.

ஆரோக்கியமற்ற உணவுகள்

ஃபாஸ்ட் ஃபுட், வறுத்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை அனைத்திலும் கொழுப்புக்கள் நிறைந்திருப்பதால், அவை உடல் எடையுடன், மார்பகத்தின் அளவையும் அதிகரிக்கும். எனவே இத்தகைய ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி

கார்டியோவாஸ்குலர் உடற்பயிற்சிகளை, சரியான டயட்டுடன் பின்பற்றினால், எடை குறைவதோடு, மார்பக தசைகளும் குறையும். அதற்காக அளவுக்கு அதிகமாக கார்டியோவாஸ்குலர் உடற்பயிற்சியை செய்தால், மார்பகங்கள் பெரிதாகிவிடும். எனவே கவனமாக இருக்கவும்.

ஆரோக்கியமான உணவுகள்

ஆரோக்கியமான உணவுகளான காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். மேலும் இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை கலோரி குறைவான உணவுகளை சாப்பிட்டால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கலோரிகள் கரைந்து, உடல் எடையுடன், மார்பகத்தின் அளவும் குறையும்.

அனிரோபிக் உடற்பயிற்சி

தசைகளை வலுபடுத்துவதற்கு பயன்படுவது தான் அனிரோபிக் உடற்பயிற்சி. அத்தகைய அனிரோபிக் உடற்பயிற்சிகளான புஷ் அப், புல் அப் போன்றவற்றை செய்தால், அவை மார்பகத்தின் அளவை குறைத்து, அழகான சிறிய மார்பகங்களாக மாற்றும்.

ஆரோக்கிய பானங்கள்

தினமும் அதிக அளவில் பானங்களை குடிக்க வேண்டும். அதுவும் பழச்சாறு மற்றும் தண்ணீர் போன்றவற்றை அதிகம் குடிக்க வேண்டும். ஆனால் கார்போனேட்டட் பானங்களை அறவே தவிர்க்க வேண்டும். இதனால் உடலில் கலோரி பற்றாக்குறை ஏற்பட்டு, உடலில் உள்ள கொழுப்புக்கள் கரையும். மேலும் மார்பகங்களும் குறையும்.

English summary

Decrease Breast Size Naturally: Remedies | மார்பகத்தின் அளவை குறைப்பதற்கான இயற்கை வழிகள்!!!

Using breast reduction surgery or pills to decrease the size of your breasts have unhealthy side effects and may damage your body permanently. Here are a few home remedies that you can try to decrease your breast size naturally.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below