Friday, May 31, 2013

பழம்பெரும் நடிகை மனோரமாவின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததால், மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.திரையுலகினரால் ஆச்சி என செல்லமாக அழைக்கப்படும் மனோரமா, ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து சாதனைப் படைத்துள்ளார்.

தற்போதும் நடித்து வரும் மனோரமாவுக்கு, சமீப காலமாக அடிக்கடி உடல் நலக் குறைவுக்குள்ளாகி சிகிச்சை் பெற்று வருகிறார்.

முன்பு மாடிப்படியில் தவறி விழுந்து அவருக்கு பலத்த அடிபட்டது. பின்னர் முழங்கால் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

இதிலிருந்து ஓரளவு தேறிவந்த அவருக்கு ரஜினி கமல் உள்ளிட்டோர் போனிலும் நேரிலும் ஆறுதல் கூறினர்.

ஓரிரு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்த அவர், சமீபத்தில் தன் பேரன் திருமண அழைப்பிதழை மூத்த அரசியல் தலைவர் கருணாநிதியைச் சந்தித்து வழங்கினார்.

இந்த நிலையில் அவருக்கு இன்று மீண்டும் உடல்நிலை மோசமானது. அவரை தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மனோரமாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below