சிவகார்த்திகேயனுடன் நெருக்கமாக இருப்பதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை, என்றார் நடிகை ப்ரியா ஆனந்த். ‘எதிர் நீச்சல்’ படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த சந்திப்பில் படத்தின் ஹீரோ சிவகார்த்திக்கேயன், கதாநாயகிகள் பிரியா ஆனந்த், நந்திதா, டைரக்டர் துரை செந்தில் குமார், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது பிரியா ஆனந்திடம், “தங்கள் படங்களில் ஹீரோயின்களை சிபாரிசு செய்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” “எனக்கு எந்த கதாநாயகனும் சிபாரிசு செய்யவில்லை என்பதால், அதுபற்றி கருத்து சொல்ல முடியாது,” என்றார்.
அடுத்து, சிவகார்த்திகேயனுடன் நெருக்கமாக பழகுவதாகக் கூறப்படுகிறதே, என்ற கேள்விக்கு, “இப்படியெல்லாம் கேட்பீர்கள் என்று தெரிந்துதான் அவரை விட்டு கொஞ்சம் தள்ளியே அமர்ந்திருக்கிறேன்,” என்றார் ப்ரியா ஆனந்த்.
0 comments:
Post a Comment