லக்ஷ்மி மேனன் வேகமாக வளர்ந்து வருவது ஹன்சிகாவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளதாம். தமிழ் திரையுலகில் கை நிறைய படம் வைத்திருப்பவர் ஹன்சிகா.
அதுவும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். பெருந்தலைகளுடன் நடிக்கிறோம் நம்மை அடித்துக்கொள்ள யாரும் இல்லை என்ற ஹன்சிகாவின் நினைப்பில் மண் விழுந்துள்ளது. கேரளாவில் இருந்து வந்துள்ள லக்ஷ்மி மேனன் பார்க்க சிம்பிளாக மட்டுமில்லை நன்றாகவும் நடிக்கிறார். அதனால் அவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிகிறது. லக்ஷ்மி மேனனின் வளர்ச்சி ஹன்சிகாவை அதிரிச்சியடைய வைத்துள்ளதாம்.
லக்ஷ்மி மேனன் பற்றிய தகவல்களை தனது உதவியாளர்கள் மூலம் சேகரிக்கிறாராம் ஹன்சிகா. லக்ஷ்மி மேனன் ஹன்சிகா போன்று கவர்ச்சியாக நடிக்காவிட்டாலும் அவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது என்று உதவியாளர்கள் ஹன்சியிடம் தெரிவித்துள்ளார்களாம். லக்ஷ்மியின் கைவசம் சித்தார்த், விமல், சசிகுமார், கௌதம் கார்த்திக் படங்கள் உள்ளன.
சேட்டை போன்று தான் நடித்து வரும் படங்களும் புஸ்ஸானால் தனது மார்க்கெட் படுத்துவிடும் என்று பயப்படுகிறாராம் ஹன்சிகா. இதனால் தமிழோடு சேர்த்து தெலுங்கு திரையுலகிலும் கவனம் செலுத்த முடிவு செய்து ஆந்திரக் கரையோரம் வாய்ப்பு தேடி வருகிறாராம்.
0 comments:
Post a Comment