பெண்ணொருவர், தாய்ப் பாலில் தேநீர் தயாரிக்கும் விநோத செயற்பாடு குறித்து ஊடகமொன்றுக்கு செய்தி வெளியிட்டுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியும் பாடகியுமான மைலின் கிலாஸ் என்ற 35 வயது பெண்ணே இவ்வாறு செய்துள்ளார்.
'எனது தந்தை தாய்ப் பாலில் தேநீர் தயாரிக்கப்படுவதையே அதிகம் விரும்பவார். இதனால், இதனை நான் ஒரு குடும்ப பாரம்பறியமாக பின்பற்றி வருகின்றேன்' என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தாய்ப் பாலினூடாக தயாரித்த தேநீரை தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்திற்கு வழங்கியுள்ளதாக அவர் ஊடகமொன்றுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இப்பெண்ணின் தந்தை ஒரு இராணுவ வீரர். ஒஸ்கார் கிலாஸ் என்று அழைக்கப்படும் இவர் தேநீரை தயாரிப்பதற்காக தனது மனைவியிடமிருந்து பாலை பெற்றுகொண்டுள்ளார்.
'இது சாதாரண செயற்பாடு. இதனை எல்லோருக்கும் முயற்சித்து பார்க்க வேண்டும். ஏனைய பானங்களைவிட தாய்ப் பாலில் தயாரிக்கப்படும் தேநீரானது மிகவும் சுவையானது.
நான் இதனை அறிந்துகொண்டே வளர்ந்தேன். அதனால், இது விநோதமானது அல்ல. நாங்கள் அன்பான குடும்பம் என்பதனை நீங்கள் தற்போது அறிந்திருப்பீர்கள்' என்று அப் பெண் மேலும் தெரிவித்துள்ளார்.
Thursday, May 30, 2013
Subscribe to:
Post Comments (Atom)
Receive all updates via Facebook. Just Click the Like Button Below▼
▼
0 comments:
Post a Comment