Friday, May 24, 2013


ந்த முன் அனுபவமும் இல்லாமல் சிந்துசமவெளி படத்தில் நடித்ததை நினைத்து வருத்தப்படுகிறேன், இனி அந்த மாதிரியான கதைகளில் நடிக்க மாட்டேன்” என்று கூறியிருக்கிறார் அமலாபால்.

என்னதான் மைனா படத்தின் மூலம் தான் அறிமுகமானேன் என்று வெளியில் சொல்லிக்கொண்டாலும் இன்றைக்கும் சிந்து சமவெளி அமலாபால் தான் சட்டென்று எல்லோருடைய ஞாபகத்திலும் வந்து போகிறார் அமலாபால்.

மாமனார், மருமகள் கள்ளக்காதலை மையமாக வைத்து ரிலீஸான இந்தப்படம் கிட்டத்தட்ட ஒரு செக்ஸ் பட ரேஞ்சில் இருந்ததால் படம் மட்டுமில்லாமல் படத்தில் நடித்த அமலாபாலுக்கும் கெட்ட பெயர் தான் கிடைத்தது. இதில் அவர் கட்டிய கணவனுக்கு துரோகம் செய்து அவன் தந்தையுடன் கள்ளத் தொடர்பு வைத்துக்கொள்பது போல ஒரு கேரக்டரில் நடித்திருந்தார்.
அப்படிப்பட்டவரை காப்பாற்றிய படமே பிரபுசாலமனின் மைனா படம் தான். அந்தப்படம் ஹிட்டானதால் இப்போது தமிழ்,தெலுங்கு ஆகிய ஒரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் அமலாபால்.

இதற்கிடைய “சிந்து சமவெளி” மாதிரியான படத்தில் நடித்தது பெரிய தவறு என்றும், இனிமேல் அது மாதிரியான படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் அமலாபால் கூறியிருக்கிறார்.

இதுபற்றி அவர் மேலும் கூறும்போது :

சினிமாவுக்கு வந்த புதிதில் எனக்கு எந்த முன்அனுபவமும் இல்லை. கதை முழுவதையும் கேட்காமல் என் கேரக்டரை மட்டுமே தெரிந்து கொண்டு சிந்து சமவெளி படத்தில் நடித்தேன். இதற்காக நிறைய விமர்சனங்கள் வந்ததால் வருத்தப்பட்டேன்.

சிந்து சமவெளி மாதிரி படங்களில் நடிக்கும் தவறை இனி நான் எப்போதுமே செய்ய மாட்டேன். இப்போதெல்லாம் முழுக்கதையையும் கேட்டுவிட்டுத்தான் எல்லாப்படங்களையும் கமிட் செய்கிறேன்.

“மைனா” எனக்கு திருப்புமுனை படமாக அமைந்தது. தமிழ், தெலுங்கில் பிசியாக நடிக்கிறேன். இரண்டு கதாநாயகிகள் படங்கள் நடிப்பதில் வருத்தம் இல்லை. சிறு கேரக்டரில் வந்தாலும் ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும். சிரஞ்சீவி மகன் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினேன். சிறப்பாக இருந்தது. கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அமலாபால் கூறியிருக்கிறார்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below