சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் போட்டிகளை பல்வேறு முக பாவனைகளுடன் பார்த்து ரசித்து வரும் கேப்டன் டோணியின் மனைவி சாக்ஷி, சென்னையில் கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக நடந்த போட்டியின்போது கோபமான முக பாவனையை வெளிப்படுத்தினார்.
டோணியின் மனைவியான சாக்ஷி, சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் போட்டிகளை தவறாமல் ரசித்துப் பார்க்கிறார். அவருடன் ஒரு டீமே வந்து பார்க்கிறது போட்டிகளை. நடிகை ஸ்ருதி ஹாசனும் சாக்ஷியுடன் இணைந்து சென்னை போட்டிகளைப் பார்த்து ரசிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
சாக்ஷி போட்டியை ரசித்துப் பார்க்கும் அழகை விதம் விதமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகிறது மீடியா.
சாக்ஷி போட்டியைப் பார்க்கும்போது வெளிப்படுத்தும் முக பாவனைகளையும், அவரது முகம் வெளிப்படுத்தும் உணர்வுகளையும் வெளியிட்டு பிரபலமாக்கி விட்டனர்.
அதில் மிகப் பிரபலமானது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புனே வாரியர்ஸிடம் தோற்றபோது உதடுகளைக் குவித்து பச்சாதாபத்தை வெளிப்படுத்தியபோது எடுத்த படம்.
இந்த நிலையில் தற்போது சாக்ஷி கோப உணர்வை தன் முகத்தில் வெளிப்படுத்துவது போன்ற ஒரு படம் வெளியாகியுள்ளது.
அதேசமயம், சென்னை போட்டிகளைக் காண வரும் ஸ்ருதி ஹாசன் சிரித்த முகத்துடன், கைகளைத் தட்டியும், கொடியை அசைத்தும் அணியை ஊக்குவித்து வருகிறார். சில நேரங்களில் ‘மெயின்’களை விட இதுபோன்ற ‘சைடு’ காட்சிகள் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்…!
0 comments:
Post a Comment