Monday, May 6, 2013


விஜய் தன்னுடைய அடுத்த படத்திற்கு ‘தலைவா’ என்று பெயர் வைத்தாலும் வைத்தார் அதைப்பற்றி வெளியாகும் சுவாரஸ்ய தகவல்களுக்கு பஞ்சமே இல்லாமல் போய்விட்டது. தினம் ஒரு தகவல்கள் அந்த படத்தைப் பற்றி வந்து கொண்டேதான் இருக்கிறது. 

விஜய் எம்.பி தேர்தலில் போட்டியிடப்போகிறார். அதுதான் படத்திற்கு தலைவா என்று பெயர் வைத்திருக்கிறார் என்று வெளியாது. அதை யாரும் மறுக்கவும் இல்லை ஒத்துக்கொள்ளவும் இல்லை. இப்போது படத்தின் நாயகிகள் அமலாபால், ராகினி நத்வானி, வில்லன் விஜய் யேசுதாஸ் பற்றியும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத செய்திகள் வெளியாகி ரசிகர்களுக்கு தீனி போட்டு வருகிறது.

படத்தில் 2 ஜோடி தலைவா படத்தில் விஜய்க்கு அமலாபால், ராகினி நத்வனி என இரண்டு ஜோடிகளாம். கதைப்படி விஜய்யின் தமிழ்நாட்டு காதலி அமலாபால். விஜய் ஒரு வேலை நிமித்தமாக மும்பை செல்ல, அங்கு அறிமுகமாகி ஒருவர் விஜய்யை காதலிப்பார்.
டிவி நடிகை ஜோடி

மும்பை காதலியாக வடக்கத்திய முகத்துடன் ஒரு நடிகையை தேடிக் கொண்டிருந்தார்கள். ரிச்சா கங்கோபாத்யா, லட்சுமிராய் என சில பெயர்கள் ஆலோசிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டுக்கு தெரிந்த முகமாக இருக்க வேண்டாம் என்று விஜய் சொல்ல அதன் பிறகு தேடிப்பிடிக்கப்பட்டவர்தான் ராகினி நத்வனி.

பிரபலமான டிவி தொகுப்பாளினி

இவர் பிரபலமான டி.வி தொகுப்பாளினி இதனால் வட இந்தியா முழுவதும் பிரபலமானவர். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருக்கும். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். “டெராடூன் டயரி” என்ற இந்திப் படத்திலும் நடித்திருக்கிறார்.

எப்படி புடிச்சாங்க?

விஜய் மும்பையில் தங்கியிருந்தபோது அங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவரைப் பார்த்த விஜய். வடநாட்டு பெண் கேரக்டருக்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று தயாரிப்பாளரிடம் சொல்ல, இயக்குனரும் ஓகே சொல்ல அடுத்த நாளே கொண்டு வந்து நிறுத்தப்பட்டு விட்டாராம் ராகினி. இப்போது தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார்

ஒன் டேக் ஆர்டிஸ்ட் புதுமுகம்

என்றாலே அதிகமாக டேக் வாங்குவார்கள். ஆனால் நந்தினி ஒன் டேக் ஆர்டிஸ்ட்டாம். எது வென்றாலும் சட்டென்று நடித்து ஓகே செய்து கைத்தட்டல் வாங்கிவிடுகிறாராம்.

மூன்று விஜய் தெரியுமா?

எல்லாவற்றையும் விட இந்த படத்தில் மூன்று விஜய் என்பதுதான் விசேசம். ஒரு நிமிஷம் பொருங்க. படத்தின் இயக்குநர் ஏ.எல். விஜய், ஹீரோ விஜய், வில்லன் பெயரும் விஜய்தான். அதாவது யேசுதாஸ் மகன் பிரபல பாடகர் விஜய்தான் தலைவா படத்தின் வில்லன். அதான் சொன்னோம் படத்தில் மூன்று விஜய் என்று( என்ன ஒரு கண்டுபிடிப்பு)

மெருகூட்டும் வில்லன் விஜய்

கவிஞர்கள் ஹீரோவாகவும், இசையமைப்பாளர்கள் ஹீரோவாகவும் நடித்த தமிழ்சினிமாவில் பிரபல பாடகர் வில்லனாக அறிமுகமாகிறார். முன்பு மலேசியாவாசுதேவன் பிரபல வில்லனாக திகழ்ந்தார். அவரது இடத்தை இவர் நிரப்புவாரா பார்க்கலாம். இதற்காக பார்ட்டி ஜிம்மில் கதியாக கிடந்து உடலை மெருகூட்டுகிறாராம்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below