Sunday, May 26, 2013

அமலா பால் ஃபேஸ்புக்கில் போட்டிருக்கும் ஒரு மெசேஜைப் பார்த்தால் அம்மணி நல்லா தானே இருந்தாங்க என்று படிப்பவர்களை நினைக்கத் தூண்டியுள்ளது. ஃபேஸ்புக்கும், ட்விட்டரும் பாமரன் முதல் பிரபலங்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்றாகிவிட்டது.

காலையில் எழுந்ததில் இருந்து தூங்கப் போகும் வரை நான் அது செய்து கொண்டிருக்கிறேன், இது செய்து கொண்டிருக்கிறேன் என்று அப்டேட் செய்கிறார்கள்.

இந்நிலையில் அமலா பால் ஃபேஸ்புக்கில் ஒரு மெசேஜ் போட்டுள்ளார். அந்த மெசேஜ் இது தான், “தங்கள் வாழ்க்கையின் ஏதேனும் ஒரு தருணத்தில் 88 சதவீத மக்கல், ப்ரிட்ஜின் கதவை மெதுவாக மூடியிருக்கிறார்கள்.

எதற்கு தெரியுமா? 

ப்ரிட்ஜில் இருக்கும் விளக்கு எப்பொழுது அணைகிறது என்று பார்க்கத் தான்…” சமீபத்தில் படித்த இந்த புள்ளிவிவரம் குறித்து தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். நிஜம் தான் இல்லாயா?! இதைப் பார்க்கையில் அமலா அவ்வளவு வெட்டியாவா இருக்கிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below