சினிமாவில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தாலும், விஜய் மக்கள் இயக்கம் சார்பில், இலவச திருமணம், படிப்பு உதவி என்று சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில் திருச்சியில் 15 ஜோடிக்கு இலவச திருமணம் நடத்தி, 51 சீர்வரிசை பொருட்களையும் வழங்கினார்.
அப்போது அவரிடம் நீங்கள் செய்து வரும் சமூக பணிக்கு பின்னணியில், எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் நோக்கம் ஏதேனும் உள்ளதா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த விஜய், ஏழைகளுக்கு உதவி செய்வதால், என் மனசுக்கு திருப்தியும், சந்தோஷமும் கிடைக்கிறது.
அதனால் தான் தொடர்ந்து என்னால் இயன்ற அளவு ஏழை மக்களுக்கு உதவி வருகிறேன் என்றும் இதற்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment