Friday, May 17, 2013


கொலிவுட்டில் சூர்யா நடிக்கும் சிங்கம் 2 படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிப்பதற்கு தீர்மானித்திருக்கிறார்.தனது முதல் படத்தினை ஆரம்பித்திருக்கிறார் சூர்யா. இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு ஒகஸ்ட் மாதம் தொடங்குகிறதாம்.

கௌதம் வாசுதேவ மேனன், லிங்குசாமி இருவரின் படங்களில் யாருடைய படம் முதலில் என்ற சர்ச்சை, குழப்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடிப்பது என முடிவு செய்துள்ளார்.

கௌதம் இயக்கத்தில் நடிக்கும் துருவநட்சத்திரத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.இதனையடுத்து சூர்யா லிங்குசாமி படத்தில் நடிக்க இருக்கிறார். படப்பிடிப்பு ஒகஸ்டு மாதம் தொடங்குகிறது.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இந்த தகவலை சமந்தா உறுதிபடுத்தியுள்ளார்.

லிங்குசாமி-சூர்யா கூட்டணியில் உருவாகும் படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார். இப்படம் குறித்த மற்ற விபரங்கள் முறைப்படி விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below