மக்களிடையே வரவேற்பை பெற்று, பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை அள்ளும் சில படங்களில் ஒன்றாக வெளிவந்துள்ள படம் 'சூது கவ்வும்'.விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி மற்றும் பலர் நடிக்க நலன் குமாரசாமி இயக்கிய இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் வெளியிட்டது.
வித்தியாசமான கதைக்களம் கொண்ட இப்படம், மக்களிடையே வரவேற்பை பெற்றது மட்டுமன்றி, தமிழ்நாட்டு திரையரங்குகளின் மூலம் மட்டும் 5 முதல் 6 கோடி வரை வசூலை ஈட்டி இருக்கிறது.
படத்தின் தயாரிப்பு செலவு மற்றும் விளம்பரப்படுத்திய பணத்தினை தமிழ்நாட்டு திரையரங்களின் வசூல் மூலமே அள்ளிவிட்டார்கள். இசை உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகியவை அனைத்துமே தயாரிப்பாளருக்கு லாபம் தான்.
அதுமட்டுமன்றி இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பெரும் விலைக்கு வாங்கி இருக்கிறார்கள்.
இதுவரை எந்த ஒரு படத்தின் உரிமையும் அவ்வளவு விலைக்கு போனது இல்லையாம்.
எப்படியோ 'சூது கவ்வும்' என்ற தலைப்பு வைத்துவிட்டு மக்களின் மனதை கவ்வி விட்டார்கள்.
0 comments:
Post a Comment