தெலுங்கில் தற்போது பரபரப்பாக நடித்து வரும் சமந்தா தனது படக்கூலியை 1 கோடியே 75 லட்சமாக உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு சமந்தாவுக்கு சினிமாவில் நல்ல பிரகாசமான எதிர்காலம் இருந்தது. ஆனால், அதிலும் ஒரு துரதிர்ஷ்டம் அவருக்கு தோல் அலர்ஜி நோய் ஏற்பட்டதால் கடல், ஐ என்ற இரண்டு படங்களில் இருந்து வெளியேறினார்.
ஆனபோதும், விழுந்த மார்க்கெட்டை இப்போது தூக்கி நிறுத்தி விட்டார். தமிழில் முன்னணி நடிகை இடத்திற்கு வரவில்லை என்றபோதும், தெலுங்கில் தற்போது அவர் தான் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார்.
இந்நேரத்தில், தனது படக்கூலியை ரூ.1 கோடியே 75 லட்சமாக உயர்த்தியுள்ளதாக ஆந்திராவில் தகவல்கள் வெளிவந்துள்ளதால் அதிர்ச்சியடைந்துள்ளார் சமந்தா.
தற்போது தெலுங்கில் நான் நடிக்கிற படங்கள் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்காக நான் சம்பளத்தையெல்லாம் உயர்த்தவில்லை.
படாதிபதிகளாக கொடுப்பதைத் தான் வாங்கிக் கொள்கிறேன். அதிலும் ஒரு கோடியே 75 லட்சம் வாங்குவதாக சொல்வது அப்பட்டமான பொய். இன்னும் நான் ஒரு கோடியையே எட்டவில்லை என்கிறார் சமந்தா.
0 comments:
Post a Comment