Thursday, April 18, 2013


கோடைக்காலங்களில் சரும நோய்கள் நம்மை வந்து அண்டாமல் இருக்க இலுப்பை இலையை அரைத்து உடலில் தேய்த்துக் குளித்து வந்தாலே போதும் (இலுப்ப இலைகள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்)..
 
கோடை காலத்தில் கை, கால்கள் வறண்டு போய் சொற சொறப்பாகிவிடும். நன்கு பழுத்த ஆப்பிளை தோலுடன் அரைத்து கை, கால் மற்றும் உடல் முழுவதும் பூசி வர, உங்கள் சருமம் பட்டுக்கே சவால் விடும்..
 
வெயிலில் செல்லும்போது, குடை அல்லது தொப்பி போட்டுக் கொள்ள வேண்டும். இதனால் முகம், உடல், கை, கால்களுக்குப் பாதுகாப்பளிப்பதோடு, சருமத்தில் ஏற்படும் தேவையில்லாத கறுப்பு நிறத்தையும் தவிர்க்கலாம். வெயிலில் செல்வதற்கு முன் கை, கால்களில் மொய்ஸ்ரைசிங் க்ரீம், சன் ஸ்கிரீன் லோஷன் ஆகியவற்றைத் தடவிச் சென்றால், வெயிலில் கறுத்துப் போவதைத் தடுக்கலாம்..
 
கழுத்து
 
தர்ப்பூசணி பழச்சாறுடன் பயத்த மாவைக் குழைத்து ஃபிரிட்ஜில் வைக்கவும். அரை மணி நேரம் கழித்து இந்தப் பேஸ்ட்டை எடுத்துக் கழுத்தில் தடவி வர, வெயிலில் வறண்டுபோன கழுத்து பளிச்சிடும். .
 
கழுத்துப் பகுதி கறுப்பாக உள்ளவர்கள் ஒரு டீஸ்பூன் வெங்காயச் சாறு, சிறிது ரோஸ்வாட்டர், இரண்டு சொட்டு ஆலிவ் எண்ணெய், ஒரு ஸ்பூன் பயத்தமாவு நான் கையும் கலந்து கழுத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் நாளடைவில் அந்த கறுப்பு நீங்கிவிடும்..

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below