Thursday, April 18, 2013


சினிமாவில் மறு பிரவேசம் செய்துள்ள நாயகி நயன்தாராவுக்கும், நடிகர் ஆர்யாவுக்கும் புனே சர்ச்சில் திருமணம் நடைபெற்றுள்ளது.

நிஜ வாழ்க்கையில் நயன்தாரா, ஆர்யா திருமணம் விரைவில் நடக்கப் போகிறது என்று ஊடகங்கள் ஆரூடம் கூறிக் கொண்டிருக்கும் நிலையில், புனே சர்ச்சில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் உண்மையில் அல்ல, ராஜா ராணி படத்தில் வரும் ஒரு முக்கிய காட்சிக்காக. அட்லீ குமார் இயக்கும் இந்தப் படத்தில் நயனும் ஆர்யாவும் ஜோடியாக நடிக்கின்றனர்.

நயன்தாராவின் தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். சந்தானம் முக்கிய வேடத்தில் வருகிறார்.
இந்தப் படத்தில் நயன்தாராவும் ஆர்யாவும் திருமணம் செய்து கொள்வது போன்ற காட்சியை புனேயில் உள்ள தேவாலயத்தில் எடுக்க முடிவு செய்த இயக்குனர், அதற்காக புனே செயின்ட் மேரீஸ் சர்ச்சில் அனுமதி பெற்றார்.

இந்தியாவில் உள்ள ஏஞ்சலிகன் தேவாலயங்களில் மிகப் பழமையானது இதுதான். ஒரு சர்ச்சில் நடக்கும் திருமணத்தில் என்னென்ன சடங்குகள் முறைப்படி நடக்குமோ அதில் ஒன்றுவிடாமல் இருவருக்கும் நடத்தப்பட்டது.

ஆர்யா கோட் சூட் அணிந்திருந்தார். நயன்தாரா பாரம்பரிய வெள்ளை கவுன் அணிந்து வந்தார். கிட்டத்தட்ட மூன்று நாட்கள் இந்த திருமணக் காட்சி படமாக்கப்பட்டது. ஆனால் அது சினிமாக்காட்சி போலவே தெரியவில்லை.

நிஜ திருமணம் போலவே இருந்தது என்கிறார்கள் செட்டிலிருந்த ராஜா ராணி குழுவினர்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below