Monday, April 29, 2013


நயன்தாராவுடனான காதல் முறிந்ததால் சில காலம் ரொம்பவும் நல்ல பிள்ளையாக இருந்த சிம்பு மீண்டும் காதல் வலையில் சிக்கியுள்ளார்.

சிம்பு, சந்தானம் நடிக்கும் வாலு படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார்.
இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிப்பதால் கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், படக் குழுவினரோ, “படப்பிடிப்பு இடைவெளியில், சக நடிகர்கள், ஜாலியாக பேசிக் கொள்வது சாதாரண விடயம்.

இதை, பில்டப் செய்து யாரோ கதை கட்டி விட்டுள்ளனர். மற்றபடி இருவருக்கும் இடையே, காதல் எதுவும் இல்லை” என்கின்றனர்.

இது குறித்து, சிம்புவும், ஹன்சிகாவும் வெளிப்படையாக கூறினால் மட்டுமே உண்மை தெரியவரும் என்கின்றன கொலிவுட் வட்டாரங்கள்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below