Sunday, April 28, 2013

பெல்காம்: கர்நாடகாவில் 20 வயது கல்லூரி மாணவி கடத்தி, கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெல்காமில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வந்தவர் 20 வயது மாணவி ராணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த வெள்ளிக்கிழமை தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு கிளம்பிய அவரை மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தார் அவரை பல இடங்களில் தேடியும் பலனில்லை. 

இதையடுத்து அவர்கள் நேற்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்நிலையில் பெல்காமில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள சுலேபாவி கிராமத்தில் நிர்வாண கோலத்தில் ராணியின் உடல் கிடந்தது கண்டிபிடிக்கப்பட்டது. அவர் பலரால் கற்பழித்து கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. குற்றவாளிகள் அவரைக் கொன்று அவரது முகத்தை கல்லால் சிதைத்து உடலில் மராதா என்று தேவனகிரியில் எழுதி வைத்துள்ளனர்.

ராணியின் ஆடை மற்றும் காலணிகளை வைத்து இறந்தது அவர் தான் என்பதை அவரது தந்தை உறுதி செய்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்துள்ளனர். இதற்கிடையே இந்த சம்பவத்தைக் கண்டித்து சுலேபாவி கிராம பேருந்து நிலையம் அருகில் உள்ள ரோட்டில் கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று எஸ்.பி,.ற்றும் துணை கமிஷனர் உறுதியளித்த பிறகே அவர்கள் கலைந்து சென்றனர்.

பெல்காம் மாவட்டத்தில் கல்லூரி மாணவி கற்பழித்து கொல்லப்பட்டுள்ளது கடந்த 3 மாதத்தில் இது 2வது முறையாகும். கடந்த ஜனவரி மாதத்தில் அதானியில் ப்ரீ யூனிவர்சிட்டி மாணவி பலரால் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகள் மாணவியின் உடலை எரித்துவிட்டனர். குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below