Saturday, April 20, 2013


பிரபல நடிகையாகிய ராதாவின் மூத்த மகளான கார்த்திகா கோ படத்தின் மூலம் கொலிவுட்டிற்கு அறிமுகமானார்.ஆனால் இந்த படத்தில் நடித்த போது கூட படப்பிடிப்பு தளங்களுக்கு செல்லவில்லையாம் அவரது தாய் ராதா.

அதையடுத்து, அன்னக்கொடி படத்தில் நடித்த போது, கதையை மட்டும் கேட்டு தெரிந்து கொண்ட ராதா தனது மகள் எப்படி நடிக்கிறார் என்பதை வேடிக்கை பார்க்கக் கூட செல்லவில்லையாம்.
பெரும்பாலும், படப்பிடிப்பு தளங்களில் நடிகைகளை விட அவர்களின் அம்மாக்கள் செய்யும் அலம்பல் தான் ஜாஸ்தியாக இருக்கும்.

ஆனால் இங்கே ராதா தான் ஒரு நடிகையாக இருந்தும் படப்பிடிப்பு தளத்தில் தலைகாட்டுவதே இல்லையே என்ன காரணம்? என்று கார்த்திகாவிடம் கேட்டால், என் அம்மாவுக்கு சினிமா தெரியும். நடிப்பில் இருக்கும் பிரச்னைகளை நன்கு உணர்ந்தவர்.

அதனால் தான், விலகியே நிற்கிறார். காரணம் நான் நடிக்கும் போது மற்றவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் அது என் மனதை பாதிக்காது.

ஆனால் என் அம்மா என்னை கவனிப்பது போல் நான் உணர்ந்தாலே நடிப்பு வராது. குறிப்பாக காதல் காட்சிகளில் சொல்லவே வேண்டாம்.

இது ஒரு நடிகையாய் என் அம்மாவுக்கு நன்றாக தெரியும். அதனால் தான் நான் நடிக்கும் படப்பிடிப்பு தளங்களுக்கே அவர் வருவதில்லை.

மீறி வந்தாலும், நான் நடித்துக் கொண்டிருக்கிற இடத்தின் பக்கமே தலைகாட்ட மாட்டார் என்கிறார் கார்த்திகா.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below