Saturday, April 13, 2013


பிரபு தேவாவுக்கு புதிய கேர்ள் பிரெண்டானார் அசின். நயன்தாராவை பிரிந்த பிரபுதேவா பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் தனது பிறந்தநாளையொட்டி சென்னை வந்த பிரபுதேவா, ‘வாழ்வில் எனக்கொரு துணை தேவை‘ என்று ஏக்கமுடன் கூறினார்.

அந்த ஏக்கம் நிறைவேறுமா, எப்போது நிறைவேறும் என்று தெரியாத நிலையில் புதிய கேர்ள் பிரெண்டாக அவருக்கு அசின் கிடைத்திருக்கிறார். பாலிவுட்டில் பக்கத்து பக்கத்து வீட்டில் அசின், பிரபுதேவா வசிக்கின்றனர். இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள வேன்கவுர் என்ற இடத்தில் நடந்த விருது வழங்கும் விழாவின் இறுதி நாள் நிகழ்ச்சிக்கு பிரபுதேவா பங்கேற்க அழைப்பு வந்திருந்தது.
 
அதுபோல் அசினுக்கும் அழைப்பு வந்தது. இதையடுத்து இருவரும் இங்கிலாந்து செல்ல முடிவு செய்தனர். ஒரே விமானத்தில் அருகருகே அமர்ந்து நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றனர். 
நிகழ்ச்சியில் பங்கேற்ற இருவரும் பின்னர் ஜோடியாக பலவித போஸ்களில் போட்டோ எடுத்துக்கொண்டனர். அந்த போட்டோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அமெரிக்க வாலிபரை அசின் காதலிப்பதாக சமீபத்தில் கிசுகிசு வெளியானது. 

இந்நிலையில் பிரபுதேவாவுடன் அவர் நெருக்கமாக நின்று போட்டோ எடுத்துக்கொண்டதும் அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுவதும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below