Wednesday, April 10, 2013

கொலிவுட்டில் ரஜனியின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் படம் கோச்சடையான்.

இப்படத்தின் டிரைலர் வருகிற ஏப்ரல் 14ம் திகதி தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என தெரிகிறது.

எந்திரன் படத்திற்கு பின்பு ரஜினி நடிப்பில் வெளியாகவிருக்கும் படமான கோச்சடையானை அவரது இரண்டாவது மகள் ‌சவுந்தர்யா முதன் முறையாக இயக்கியுள்ளார்.

மோஷன் கேப்டர் எனும் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள முதல் இந்திய படம் கோச்சடையான் ஆகும்.

இப்படத்தில் ரஜினி ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ஆதி, நாசர், இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், ருக்மணி, ஷோபனா என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு லண்டன், கேரளா என பல இடங்களில் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் டிரைலர் மே மாதம் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அதற்கு முன்பாகவே ரசிகர்களுக்காக வருகிற ஏப்ரல் 14ம் திகதி தமிழ் புத்தாண்டு தினத்தன்று ஒரு டிரைலர் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below