Sunday, April 28, 2013


இந்திய இணைய வெளியில் புதிய வகை கம்ப்யூட்டர் வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ‘வின்32′ அல்லது ‘ராம்னிட்’ என்று அழைக்கப்படுகிற கம்ப்யூட்டர் வைரஸ் வகையை சேர்ந்தது.

இணையம் மூலமாக இந்த வைரஸ் பரவுகிறது. இதனை நாம் கிளிக் செய்தால் அது நமது கணிப்பொறியில் உள்ள புரோகிராம் பைல்களை தாக்கும்.

இதன் மூலம் ரகசியமாக உள்ள வங்கி கணக்கு எண், பாஸ்வேர்டு போன்ற தகவல்களை திருடிக்கொள்ளும் விதமாக இந்த வைரஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. வைரஸில் இருந்து பாதுகாக்கும் மென் பொருட்களால் கூட இதனை கண்டுபிடிக்க முடிவதில்லை.

பாதுகாப்பு மென்பொருட்களை அடிகடி புதுப்பித்து கொள்வது, இணையத்திலிருந்து நம்பகம் இல்லாத மென்பொருட்களை பதிவிறக்கம் செய்வதை தவிர்ப்பது ஆகியவற்றின் மூலம் இதன் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம் என்று இந்திய கணிப்பொறி வல்லுனர்கள் குழு தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below