டெல்லியில் மிகவும் மந்தமான பயிற்சி பிட்ச்களை விளையாட அளித்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி கோபத்தில் பயிற்சியைத் துறந்து வெளியேறினார்.
இது குறித்து ரிசர்வ் வீரர் ஒருவர் கூறுகையில், “பந்துகள் பேட்டிற்கு வர யுகம் ஆகிறது. இந்தப் பிட்சில் டீசண்டான பேட்டிங்கை வெளிப்படுத்தமுடியாது. என்னைப்போன்ற விளிம்பி நிலை வீரர் கூட இதில் ஆட முடியாது. தோனி உள்ளிட்ட டாப் வீரர்களின் நிலையை யோசித்துப்பாருங்கள்” என்றார் அவர்.
இது குறித்து பிட்ச் தயாரிப்பாளர் வெங்கட் சுந்தரிடத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “பிட்ச் பற்றி ஒரு பிரச்சனையும் இல்லை, மையத்தில் உள்ள பிட்சை அவர்கள் பயிற்சிக்கு கொடுக்க எதிர்பார்த்திருக்கலாம் ஆனால் அதற்கு அனுமதி கிடையாது” என்றார்.
இரண்டு குழுக்களாக பிரிந்து சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பயிற்சி பெற்றுவந்தனர். ஆனால் மற்ற வீரர்கள் பிட்ச் பற்றி கூறியவுடன் தோனி பயிற்சியிலிருந்து வெளியேறினார்.
0 comments:
Post a Comment