ஒரு வாரமாக அஞ்சலி மாயமாகி விட்டதால், அவருடன் நடித்த சில நடிகர்களையும் விட்டுவைக்கவில்லை போலீசார். குறிப்பாக ஜெய்யிடம் பல கோணங்களில் விசாரணை நடத்தி காய்ச்சி எடுத்து விட்டார்களாம்.
குறிப்பாக, ஜெய் மீது எந்த சந்தேகமும் இல்லை என்று அஞ்சலியின் சித்தி பாரதிதேவி கொடுத்த ஸ்டேட்மென்ட் காரணமாகத்தான், அப்படின்னா இதுக்குள் ஏதோ சமாச்சாரம் இருக்கு என்று ஜெய் மீது விசாரணையை திருப்பினார்களாம். இதனால் எங்கிருந்தாலும் அஞ்சலி வந்து விடவேண்டும் என்று வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டிருந்தாராம் ஜெய்.
இப்படியாக ஒருவாரம் அவர் விரதமிருந்து கொண்டிருக்க, ஒருவழியாக ஐதராபாத் போலீசில் ஆஜரானார் அஞ்சலி. அதன்பிறகுதான் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார் ஜெய்.
அதோடு, ஒரு வாரமாக ஒருவேளை, இந்த அஞ்சலி நீண்டநாள் ஜர்க் கொடுத்து விட்டால், அனைவரது சந்தேகமும் நம்மீது திரும்பிவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தவர், அவர் வந்த சந்தோசத்தை பெருசாக கொண்டாடி மனசை ரிலாக்ஸ் பண்ண வேண்டுமென்று ஈசிஆர் சாலைக்கு நண்பர்களுடன் சென்றாராம். அங்கே ஒருநாள் பகலில் ஆரம்பித்த பார்ட்டி நள்ளிரவுக்கு பிறகும் தொடர்ந்ததாம்.
அதன்பிறகு அனைவரும் காரை ஓட்டிக்கொண்டு சிட்டிக்குள் வந்திருக்கிறார்கள். ஆனால் சந்தோச களிப்பில் இருந்த நடிகர் எக்குத்தப்பாக காரை ஓட்டிச்செல்ல ஒரு இடத்தில் காரை உரசி விட்டாராம். நல்லவேளை எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லையாம். அதோடு, பார்ட்டி கொண்டாட்டத்தை இத்தோடு நிறுத்திக்குவோம் என்று சின்சியராக காரை ஓட்டியபடி வீடு வந்து சேர்ந்தாராம் நடிகர்
0 comments:
Post a Comment